ADDED : பிப் 25, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே செண்டுவாரை எஸ்டேட், லோயர் டிவிஷனைச் சேர்ந்தவர் ஜெயபால் மனைவி லீலா 54. இவர், நேற்று முன்தினம் விறகு சேகரிக்க காட்டிற்கு சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
கணவர் உள்பட உறவினர்கள் தேடிய போது காட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். அவரது உடல் இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையில் விஷத் தன்மை கொண்ட பாம்பு கடித்து இறந்ததாக தெரியவந்தது.

