ADDED : ஆக 19, 2024 01:01 AM
தேனி : தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் பஸ் மோதிய விபத்தில் ஓட்டலில் பணிபுரியும் பெண் தொழிலாளி அரண்மனைப்புதுார் மாரியம்மன் கோயில் தெரு கல்யாணசுந்தரி 56, பலியானார்.
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்க வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் சிரமப்படுகின்றனர். பஸ் டிரைவர்கள் பலர் நகர் பகுதியில் மின்னல் வேகத்தில் பஸ்களை இயக்குவதும் தொடர்கிறது.
இந்நிலையில் நேற்று இரவு கல்யாணசுந்தரி பகவதி அம்மன் கோயில் தெரு அருகே பஸ் நிறுத்தும் பகுதியில் நின்றிருந்தார். கம்பத்தில் இருந்து தேனி வழியாக மதுரை சென்ற தனியார் பஸ் கல்யாணசுந்தரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
காயமடைந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

