/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று நகைகள் கொள்ளை
/
பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று நகைகள் கொள்ளை
ADDED : ஆக 20, 2024 04:31 AM

போடி: தேனி மாவட்டம் போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி கைகளை கட்டி கழுத்தை நெரித்துக் கொலை செய்து கழுத்து காதில் அணிந்திருந்த நகைகள், பீரோவை உடைத்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சில்லமரத்துப்பட்டி தாத்தாப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் பழனிச்சாமி 65. இவர் கோயம்புத்தூரில் செக்யூரிட்டி வேலை செய்கிறார்.
இவரது மனைவி செல்லத்தாய் 55. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் வினோத் 34, எல்லைப்பாதுகாப்பு படையில் வேலை செய்கிறார். மகன்கள் திருமணம் முடித்த நிலையில் செல்லத்தாய் மட்டும் சில்லமரத்துப்பட்டி வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
வினோத் இரண்டு நாட்களாக தாய் செல்லத்தாயை அலைபேசியில் அழைத்தார். ஆனால் தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த வினோத் உறவினரிடம் தெரிவித்தார்.
உறவினர் வீட்டுக்கு சென்ற போது துர்நாற்றம் வீசியது. செல்லத்தாய் வீட்டில் உள்ள அறையில் மெத்தையில் இறந்து கிடந்தார்.
எஸ்.பி., சிவபிரசாத், டி.எஸ்.பி., பெரியசாமி, இன்ஸ்பெக்டர் உலகநாதன் சம்பவயிடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
தடயவியல், மோப்பநாய் பிரிவு போலீசார் தடயங்களை சேகரித்தனர்.
மெத்தையில் செல்லத்தாய் இரு கைகளும் கட்டப்பட்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது தெரிந்தது.
காது, கழுத்தில் இருந்த தோடு, செயின், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.
செல்லத்தாய் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

