/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண் மர்மசாவு: கொலையா என போலீசார் விசாரணை
/
பெண் மர்மசாவு: கொலையா என போலீசார் விசாரணை
ADDED : மார் 03, 2025 07:12 AM

மூணாறு,: வட்டவடை, கொட்டாக்கொம்பூரில் வீட்டினுள் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மூணாறு அருகே வட்டவடை, கொட்டாக் கொம்பூரைச் சேர்ந்தவர் கலைவாணி 31. கணவரை விட்டு பிரிந்த இவர், தனது இரண்டு குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்தார். இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ராமசந்திரனுடன் 35, பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டினுள் கலைவாணி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிள்ளைகள் இருவரும் பாட்டி வீட்டிற்கு சென்ற நிலையில் ராமசந்திரன் மது போதையில் கலைவாணியை தேடி சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன்பின் உறங்கியவர் நள்ளிரவு 2:30 மணிக்கு விழித்தபோது கலைவாணி துாக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததாகவும் போலீசாரிடம் ராமச்சந்திரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
துாக்கிட்ட நிலையில் கிடந்ததாக ராமசந்திரன் கூறிய நிலையில், 'உடல் தரையில் கிடந்ததால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்.' என, சந்தேகம் எழுந்தது. தேவிகுளம் போலீசார் ராமசந்திரனிடம் விசாரிக்கின்றனர்.