/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'மார்பிங்' செய்து ஆபாச படம் பதிவிட்டதாக பெண்கள் புகார்
/
'மார்பிங்' செய்து ஆபாச படம் பதிவிட்டதாக பெண்கள் புகார்
'மார்பிங்' செய்து ஆபாச படம் பதிவிட்டதாக பெண்கள் புகார்
'மார்பிங்' செய்து ஆபாச படம் பதிவிட்டதாக பெண்கள் புகார்
ADDED : ஜூன் 17, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : வட்டவடையில் ஆபாசமாக 'மார்பிங்' செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக 2 பெண்கள் போலீசில் புகார் அளித்தனர்.
மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த 22, 24 வயதுடைய பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக ' மார்பிங்' செய்து, முகநுால் உட்பட சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டனர். அதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெண்கள் இருவரும் போலீசில் புகார் அளித்தனர். அச்சம்பவம் குறித்து தேவிகுளம் போலீசார், ரகசிய பிரிவினர் ஆகியோர் விசாரிக்கின்றனர். இரண்டு பெண்களில் ஒருவர் திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடதக்கது.