ADDED : மார் 10, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி, கொடைக்கானல், விருதுநகர் ரோட்டரி சங்கம் இணைந்து சர்வதேச மகளிர் தின விழா கல்லூரி முதல்வர் சேசுராணி தலைமையில் நடந்தது.
செயலர் சாந்தாமேரி ஜோஷிற்றா முன்னிலை வகித்தனர். மகளிர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சகாயமேரி, பேராசிரியை பாத்திமாமேரி சில்வியா வரவேற்றனர்.
பேராசிரியர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் 'யாதுமானவளே' தலைப்பில் பேசுகையில்:
பெண்கள் தங்கள் இலக்கை அடைவதற்கு கல்வி இன்றியமையாதது. மாணவிகள் தன்னம்பிக்கை, தைரியத்துடன் செயல்பட வேண்டும்.
உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்தால் சாதனை உங்களுக்கு சாத்தியமே என்றார்.
பெண் தொழில்முனைவோர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இயற்பியல் துறை பேராசிரியை ஆரோக்கிய ஜென்ஸி நன்றி கூறினார்.