ADDED : மார் 06, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: கள்ளிக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் 39, இவரது மனைவி அலமேலு 36, இருவரும் 15 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். ராம்குமார் தேனி மற்றும் கேரளாவுக்கு கூலி வேலைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
மது குடிக்கும் பழக்கம் இருந்த அவர் கடந்த சில மாதங்களாக கடமலைக்குண்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் மது குடித்துவிட்டு கடமலைக்குண்டில் ஒரு ஓட்டல் அருகே இறந்து கிடந்தார்.
மனைவி அலமேலு புகாரில் கடமலைக்குண்டு போலீசார் ராம்குமார் இறப்பு குறித்து விசாரிக்கின்றனர்.