/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடியிருப்பு பகுதிகளில் வலம் வரும் வன விலங்குகள் மூணாறில் தொழிலாளர்கள் அச்சம்

ADDED : ஆக 16, 2024 04:58 AM

மூணாறு: மூணாறில் குடியிருப்பு பகுதிகளில் காட்டு மாடு, யானை ஆகியவை வலம் வருவதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.
மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் கடந்த காலங்களை விட சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக புலி, சிறுத்தை, காட்டு மாடு, யானை அதிகமாக நடமாடுகின்றன. அவற்றால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் காட்டு மாடு, யானை ஆகியவை குடியிருப்பு பகுதியில் வலம் வருவதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை கடந்த ஒரு வாரமாக குண்டளை, செண்டுவாரை, சிட்டி வாரை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் வலம் வருகிறது. சிட்டிவாரை எஸ்டேட் சவுத் டிவிஷனில் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு நுழைந்த படையப்பா தொழிலாளர்களின் வீடுகளுக்கு அருகில் இருந்த வாழைகளை தின்றது.
காட்டு யானைகளை போன்று காட்டு மாடுகளும் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. மூணாறு அருகே நல்லதண்ணி எஸ்டேட் ஐ.டி.டி.யில் குடியிருப்பு பகுதியில் பட்ட பகலில் காட்டு மாடு நடமாடியது. அதனை பார்த்து வீட்டிற்குள் ஓடி பெண்கள் உள்பட பலர் உயிர் தப்பினர்.