/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளியில் பஸ் வசதியின்றி தொழிலாளர்கள் அவதி
/
குமுளியில் பஸ் வசதியின்றி தொழிலாளர்கள் அவதி
ADDED : மே 15, 2024 07:04 AM
கூடலுார் : குமுளியில் மாலையில் கூடுதல் பஸ் வசதியின்றி தோட்ட தொழிலாளர்கள் அவதிப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் குமுளி வழியாக கேரளாவில் உள்ள ஏலத் தோட்டங்களுக்கு விவசாய பணிகளுக்காக பஸ், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் சென்று திரும்புகின்றனர்.
பணி முடிந்து மாலை நேரத்தில் கூடலுார், கம்பம் பகுதிகளுக்கு செல்ல குமுளி பஸ் ஸ்டாப்பில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தற்போது மாலை நேரத்தில்மழை பெய்வதால் ஒதுங்குவதற்கு கூட இடமின்றி சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அதனால் மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை கூடுதல் டவுன் பஸ்களை இயக்க போக்குவரத்துத் துறை முன் வரவேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

