ADDED : மார் 06, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் கணித துறை சார்பில் மாநில அளவிலான போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி பயிலரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்தார். கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி ஆசிரியர் குமரன், ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்ப கல்லுாரி பேராசிரியர் செல்வகணேஷ் ஆகியோர் போட்டி தேர்வுகள் பற்றி விளக்கினர். இந்த பயிலரங்கில் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.