ADDED : ஜூன் 07, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: உலக சுற்றுச்சூழல் தினமாக ஜூன் 5 கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்றுஇடுக்கி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஷீபா ஜார்ஜ், எஸ்.பி. விஷ்ணுபிரதீப் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
கலெக்டர் அலுவலகஊழியர்கள், போலீசார் உள்பட பலர் பங்கேற்றனர்.அப்போது கலெக்டர் கூறுகையில்., இடுக்கி மாவட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
தேவையின்றி மரங்களை வெட்டாமல், பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்த்து வருங்கால தலைமுறையினருக்கு முன் உதரணமாக இருக்க வேண்டும்,என்றார்.