/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மானியத்தில் மண்புழு உரப்படுக்கை வாங்க விண்ணப்பிக்கலாம்
/
மானியத்தில் மண்புழு உரப்படுக்கை வாங்க விண்ணப்பிக்கலாம்
மானியத்தில் மண்புழு உரப்படுக்கை வாங்க விண்ணப்பிக்கலாம்
மானியத்தில் மண்புழு உரப்படுக்கை வாங்க விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 27, 2024 04:20 AM
தேனி : ஐம்பது சதவீத மானியத்தில் மண்புழு உரப்படுக்கை வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் செயற்கை உரங்கள் மட்டும் பயன்படுத்தாமல், இயற்கை உரங்களான மண்புழு உரங்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 50 சதவீத மானியத்தில் மண்புழு உரங்கள் தயாரிப்பதற்கு மண்புழு உர தயாரிப்பு படுக்கை வழங்கப்பட உள்ளது. உரப்படுக்கை 12 மீ., நீளம், 4 மீ., அகலம், 2மி., உயரம் உடையதாக இருக்கும். விவசாயிகள் மானியம் போக மீதம் ரூ. 3ஆயிரம் செலுத்த வேண்டும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் இரண்டு உரப்படுக்கை வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரத்திற்கும் வழங்க உள்ளோம். உர தயாரிப்பு படுக்கை வாங்க விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி, அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம்.மேலும் இயற்கை ஈடுபொருட்களான பஞ்சகாவியம், மூலிகை பூச்சிவிரட்டி, வேப்பம்புண்ணாக்கு யார் செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இவை தயாரிக்க மாவட்டத்தில் 3 விவசாய குழுக்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் வழங்க உள்ளனர். இதற்காக சின்னமனுார், க.மயிலாடும்பாறை, போடி ஆகிய 3 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வட்டாரங்களில் உள்ள தலா 12 முதல் 20 பேர் கொண்ட விவசாயிகள் அடங்கிய குழுக்கள் இயற்கை ஈடு பொருட்கள் தயாரிப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.