/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி நகராட்சியில் மண்டல இயக்குனர் விசாரணை
/
தேனி நகராட்சியில் மண்டல இயக்குனர் விசாரணை
ADDED : ஏப் 25, 2024 04:29 AM
தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை சேலம் மண்டல இயக்குனர் பூங்கொடி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.
தேனி நகராட்சியில் 2021ல் கமிஷனராக சுப்பையா பணி புரிந்தார். அதே ஆண்டு அக்., ல் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.40 ஆயிரம் கைப்பற்றப்பட்டு, ஆவணங்கள் வழங்கியதின் அடிப்படையில் பணம் அலுவலர்களிடம் திருப்பி வழங்கப்பட்டது. இச்சம்பம் தொடர்பாக நகராட்சி நிர்வாக ரீதியான விசாரணை நடந்து வந்தது. சுப்பையா தற்போது பொள்ளாச்சி நகராட்சியில் கமிஷனராக பணிபுரிகிறார்.
இவர் மற்றும் சில அலுவலர்கள் வரும் மாதங்களில் ஓய்வு பெற உள்ளனர்.
இதனால் துறை ரீதியான விசாரணை நேற்று தேனி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறைசேலம் மண்டல இயக்குனர் பூங்கொடி தலைமையில் நடந்தது. விசாரணையில் 2021 அக்.,ல் தேனி நகராட்சியில் பணிபுரிந்த பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

