/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர் மீது மோதிய ஆட்டோ கவிழ்ந்து 10 பேர் காயம்
/
டூவீலர் மீது மோதிய ஆட்டோ கவிழ்ந்து 10 பேர் காயம்
ADDED : மே 04, 2025 05:27 AM
தேனி, : வீரபாண்டி அருகே ஆட்டோ டூவீலரில் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
மேலசிந்தலைச்சேரி ஆட்டோ டிரைவர் கணசேன் 49. இவர் சிந்தலைச்சேரியில் இருந்து தேனி நோக்கி ஆட்டோ ஓட்டி வந்தார். ஆட்டோவில் போடி அம்மாபட்டி இந்திரதேவன் 41, தேவதர்சன் 11, ரேஷ்மா 31, மேலசிந்தலைச்சேரி சந்தோஷம் 54, ரதி 57, ராஜாத்தி 75, சாந்தா 60, தியா 5, ராமு 70 ஆகியோர் பயணித்தனர். ஆட்டோ திண்டுக்கல் -குமுளி பைபாஸ் ரோட்டில் எஸ்.பி.எஸ்., காலனி அருகே சென்ற போது எதிரே வந்த டூவீலர் மீது ஆட்டோ மோதி கவிழந்தது. டூவீலர் ஓட்டி வந்த ராஜதானி கீழமஞ்சநாயக்கன்பட்டி முருகன் மகன் பந்தல்ராஜா 18, பலத்த காயமடைந்தார்.
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் கணேசன், ஆட்டோவில் பயணித்த 8 பேர் உட்பட 10 பேரும் காயமடைந்தனர். இவர்கள் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். பந்தல்ராஜா மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பந்தல்ராஜா தந்தை முருகன் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.