/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுற்றுலா பயணிகள் வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்
/
சுற்றுலா பயணிகள் வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்
ADDED : ஜூலை 20, 2025 05:11 AM
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே சின்னச்சுருளி அருவியில் குளிக்க சென்ற திருமங்கலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வேன் கவிழ்ந்ததில் 10 பேர் காயமடைந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் சின்னச் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சின்னச் சுருளி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்து, சுற்றுலா வரும் பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர். தடை உத்தரவு குறித்து தகவல் தெரியாத சுற்றுலா பயணிகள் பலரும் நேற்று சின்னச் சுருளி அருவிக்கு செல்ல முடியாமல் திரும்பினர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து 10 பேர் டூரிஸ்ட் வேனில் சின்னச்சுருளி அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர். அவர்களையும் வனத்துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர். அருவி பகுதியில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் திரும்பி வரும்போது கட்டுப்பாடு இழந்த வேன் ரோட்டின் ஓரத்தில் விவசாய நிலத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 10 பேர் லேசான காயமடைந்தனர். தலையில் பலத்த காயமடைந்த குமார் என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.