/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தமிழக அரசு ஊதியம் வழங்காததால் 107 முதுநிலை ஆசிரியர்கள் தவிப்பு
/
தமிழக அரசு ஊதியம் வழங்காததால் 107 முதுநிலை ஆசிரியர்கள் தவிப்பு
தமிழக அரசு ஊதியம் வழங்காததால் 107 முதுநிலை ஆசிரியர்கள் தவிப்பு
தமிழக அரசு ஊதியம் வழங்காததால் 107 முதுநிலை ஆசிரியர்கள் தவிப்பு
ADDED : அக் 08, 2024 01:48 AM
தேனி: ''தமிழக அரசு 4 மாதங்களாக சம்பளம் வழங்காததால் 107 முதுநிலை ஆசிரியர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். எனவே அரசு ஆசிரியர்களுக்கு விரைந்து ஊதியம் வழங்க வேண்டும்,'' என, தேனியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயாளர் அன்பழகன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கூடுதல் எண்ணிக்கையை பொறுத்து 2019ல் அரசாணை 105 ஐ பின்பற்றி மாநிலம் முழுவதும் 107 முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஊதியம் வழங்க நிதி விடுப்பு உத்தரவு மூலம் 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை ஆணை வழங்கி ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இவர்களுக்கு ஜூனுக்கு பிறகு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக இயக்குனரகம், செயலகம் உள்ளிட்ட இடங்களில் முதுநிலை ஆசிரியர்கள் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை.
ஐ.எப்.எச்.ஆர்.எம்.,ல் உள்ள நிர்வாக சிக்கலால் சம்பளம் வழங்க இயலவில்லை என கருவூலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசு ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்திற்கு நிதி ஒதுக்காத போது முதுநிலை ஆசிரியர்கள் மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதே வேளையில் மாநில அரசில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது தமிழக அரசின் தார்மீக கடமை.
ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டிக்கின்றோம். அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட 107 முதுநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறுவழியில்லை என்றார்.