/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீசாரை தாக்கிய 11 பேர் விடுவிப்பு
/
போலீசாரை தாக்கிய 11 பேர் விடுவிப்பு
ADDED : ஏப் 14, 2025 05:56 AM
மூணாறு: மூணாறில் கடந்த 2015ல் நடந்த 'பெண்கள் உரிமை' போராட்டத்தின் போது போலீசாரை தாக்கிய சம்பவத்தில் 11 பேரை வழக்கில் இருந்து விடுவித்து தேவிகுளம் துணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
மூணாறில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு போனஸ், ஊதிய உயர்வு வழங்கக்கோரி பெண் தொழிலாளர்கள் முன் நின்று 'பெண்கள் உரிமை' எனும் போராட்டம் 2015ல் செப்டம்பரில் 20 நாட்களுக்கும் மேலாக நடந்தது.
அப்போது போலீசாரை தாக்கியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜோபிஜான், ராஜன், ஜெயராம், காங்கிரசைச் சேர்ந்த நெல்சன், ஜோதிராம், பிரேம்குமார், சரவணன், குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சந்தோஷ், கண்ணன், நாகராஜ் ஆகியோர் மீது மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தேவிகுளம் துணை நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுனில் பெர்குமான்வர்க்கி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்யாததால் வழக்கில் இருந்து 11 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.

