ADDED : டிச 15, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்டத்தில் டிச.,13,14 ஆகிய இருநாட்கள் பதிவான மழையளவு (மி.மீ.,ல்)ஆண்டிபட்டி 77, அரண்மனைப்புதுார் 54.2, வீரபாண்டி 42.8, பெரியகுளம் 109.4,மஞ்சளாறு 73, சோத்துப்பாறை 57, வைகை அணை 73, போடி 48.2, உத்தமபாளையம் 66.2, கூடலுார் 70.8, பெரியாறு அணை 155, தேக்கடி 208.2, சண்முகாநதி அணை 135 என மொத்தம் 1170 மி.மீ.,(117செ.மீ.,) மழை பதிவானது.
உத்தமபாளையம் தாலுகாவில் கூடலுார் கம்போஸ்ட் தெரு முருகன், ஆண்டிப்பட்டி மயிலாடும்பாறை பழனியம்மாள், தங்கம்மாள்புரம் வேல்முருகன், பெரியகுளம் டி.வாடிப்பட்டி கோப்பம்மாள் ஆகிய நால்வரது வீடுகள் பகுதி சேதம் அடைந்தன.