ADDED : ஏப் 04, 2025 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 125.4 மி.மீ., மழை பெய்தது. பகுதியில் நேற்று முன்தினம் பகலில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. மாலையில் குளிர்ந்த காற்று வீசிய நிலையில் இரவில் கனமழை பெய்தது.
பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை இரவு வரை தொடர்ந்ததால் பலமுறை மின்சாரம் தடைபட்டது. குழந்தைகள், முதியவர்கள் சிரமம் அடைந்தனர். நேற்றும் மாலையில் கருமேகம் சூழந்து காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்தது. 30.8 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 23 மி.மீ., வீரபாண்டியில் 8.4 மி.மீ., பெரியகுளத்தில் 9.2 மி.மீ., சோத்துப்பாறை அணையில் 12 மி.மீ., வைகை அணையில் 27.2 மி.மீ., போடியில் 7.2 மி.மீ., கூடலுாரில் 1.6 மி.மீ., தேக்கடியில் 3.6 மி.மீ., சண்முகாநதி அணையில் 2.4 மி.மீ., என மொத்தம் 125.4 மி.மீ., மழை பதிவானது.

