/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் 12,802 மாணவர்கள் இன்று பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்
/
மாவட்டத்தில் 12,802 மாணவர்கள் இன்று பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்
மாவட்டத்தில் 12,802 மாணவர்கள் இன்று பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்
மாவட்டத்தில் 12,802 மாணவர்கள் இன்று பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்
ADDED : மார் 01, 2024 12:26 AM
தேனி : இன்று துவங்கும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் 12,802 பள்ளி மாணவர்கள், 299 தனித்தேர்வர்கள் எழுதுகின்றனர்.
மாவட்டத்தில் 54 மையங்களில் பிளஸ் 2 தேர்வு நடக்கிறது. இதில் பள்ளி மாணவர்கள் 12,802 பேர், தனித்தேர்வர்கள் 299 பேர் என 13,101 பேர் எழுதுகின்றனர். ஒவ்வொரு மையத்திலும் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், 10 வகுப்பறைக்கு ஒரு பறக்கும் படை அதிகாரி, 11 வழித்தடங்களில் பறக்கும் படையில் 120 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அறை கண்காணிப்பாளர்களாக 880 ஆசிரியர்கள் செயல்படுகின்றனர். தேர்வின் போது தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வறையில் குடிநீர் வழங்கவும், சுகாதார வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வுகள் காலை 10:00 மணிக்கு துவங்கி மதியம் 1:15 மணிக்கு நிறைவடைகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வில் 11,562 பேர்
மூணாறு:- கேரளாவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 4ல் துவங்கி மார்ச் 25ல் நிறைவு பெறுகிறது. இடுக்கி மாவட்டத்தில் 6064 மாணவர்கள், 5498 மாணவிகள் என 11562 பேர் தேர்வு எழுதுகின்றனர். அரசு பள்ளி அளவில்
இந்த முறையும் கல்லார் அரசு மேல்நிலை பள்ளிஅதிகளில்தேர்வு எழுதும் பள்ளிகளில்354 பேர் தேர்வு எழுதி முதலிடம் பெறுகின்றனர்.எழுகும்வயல் அரசு மேல் நிலை பள்ளியில்இருவர்மட்டும்தேர்வு எழுதுகின்றனர்.
மேல்நிலை பள்ளி மற்றும் தொழில் பயிற்சி மேல்நிலை பள்ளிகளில் முதலாம், இரண்டாம் ஆண்டு பொது தேர்வுகள் இன்று (மார்ச் 1) துவங்கி மார்ச் 26ல் நிறைவு பெறுகிறது.
மாவட்டத்தில் பொது தேர்வுக்கான அனைத்து பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

