/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவரை கண்டித்து தி.மு.க., உட்பட 13 கவுன்சிலர்கள் வெளிநடப்பு
/
ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவரை கண்டித்து தி.மு.க., உட்பட 13 கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவரை கண்டித்து தி.மு.க., உட்பட 13 கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவரை கண்டித்து தி.மு.க., உட்பட 13 கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : பிப் 01, 2024 05:08 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா (தி.மு.க.) வின் தன்னிச்சையான போக்கை கண்டித்து தி.மு.க.,கவுன்சிலர்கள் உட்பட 13 பேர் வெளிநடப்பு செய்தனர்.
ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளில் தி.மு.க.,9, அ.தி.மு.க.,5, சுயே., 2, இந்திய கம்யூ.,1, மார்க்சிஸ்ட் கம்யூ.,1 கவுன்சிலர்கள் உள்ளனர். தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த சந்திரகலா, துணைத் தலைவராக ஜோதி ஆகியோர் உள்ளனர். பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நேற்று செயல் அலுவலர் விஜயா முன்னிலையில் துவங்கியது. கூட்டத்தில் 16 கவுன்சிலர்கள் வந்திருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் 18ல் நடந்த அவசர கூட்டத்தில் கொண்டு வந்த பொருள் குறித்து கவுன்சிலர்களின் விவாதத்தின் முடிவில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தீர்மானத்தை கவுன்சிலர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் அதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் பேரூராட்சி தலைவர் சந்திரகலா 'மினிட்' புத்தகத்தில் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இது குறித்து 14வது வார்டு தி.மு.க.,கவுன்சிலர் சரவணன் கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து மற்ற கவுன்சிலர்களும்,இதுகுறித்து தலைவரிடம் கேட்டனர். தலைவர் முறையான பதில் கூறவில்லை.
கவுன்சிலர்களை அவமரியாதையுடன் பேசியதால் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதனை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் உட்பட 13 பேர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து கூட்டம் நடைபெறவில்லை. மறு தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் தெரிவித்தார்.