/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனீக்கள் கொட்டியதில் 13 பேர் பாதிப்பு
/
தேனீக்கள் கொட்டியதில் 13 பேர் பாதிப்பு
ADDED : ஜன 04, 2025 04:34 AM
கடமலைக்குண்டு: கண்டமனுார் துரைசாமிபுரம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 13 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
துரைச்சாமிபுரம் கிராமத்திலிருந்து அண்ணாநகர் கிராமத்திற்கு செல்லும் பாதையில் மரத்தில் இருந்து கிளம்பிய தேனீக்கள் ரோட்டில் சென்றவர்களை விரட்டி, விரட்டி கொட்டியது. இதில் 13 பேர் காயமடைந்தனர். தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தவர்கள், கண்டமனுார் அரசு ஆரம்ப சுகாதார
நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். பாதிப்பு அதிகம் இருந்த துரைசாமிபுரம் சென்றாயன் 60, காந்திமதி 51, சரத்குமார் 29, அண்ணாநகர் தங்கப்பிள்ளை 50, ஆகியோர் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் குறித்து கண்டமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

