/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு 13 சதவீத போனஸ்: பேச்சில் உடன்பாடு
/
ஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு 13 சதவீத போனஸ்: பேச்சில் உடன்பாடு
ஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு 13 சதவீத போனஸ்: பேச்சில் உடன்பாடு
ஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு 13 சதவீத போனஸ்: பேச்சில் உடன்பாடு
ADDED : ஏப் 24, 2025 06:10 AM
கம்பம்: ஏலத் தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டிற்கான போனஸ் 13 சதவீதம் என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
கேரளா, இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. ஏலத் தோட்டங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு மட்டும் ஆண்டு தோறும் தொழிலாளர் நலச் சட்டப்படி போனஸ் வழங்கப்படுகிறது.
போனஸ் பேச்சுவார்த்தைகள் மார்ச்சில் துவங்கி பல கட்டங்களாக நடைபெறும்.
ஏல விவசாய சங்க பிரதிநிதிகளும், தொழிலாளர் சங்க நிர்வாகிகளும் பங்கேற்பார்கள்.
இந்தாண்டிற்கான போனஸ் பேச்சுவார்த்தைகள் மார்ச் முதல் 5 கட்டங்களாக நடந்தது . விவசாய சங்கங்களுக்கும், யூனியன்களுக்கும் இடையே முடிவு எட்டப்படவில்லை. ஆறாவது முறையாக நேற்று முன்தினம் வண்டன் மேட்டில் உள்ள கார்டமம் குரோவர்ஸ் அசோசியேசன் அலுவலகத்தில் நடைபெற்றது.
பேச்சு வார்த்தை
கம்பம் கேரள கார்டமம் குரோயர்ஸ் யூனியன் தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் துணை தலைவர் குமரன், போடி சிபிஏ தலைவர் சுப்ரமணியன், செயலர் புருஷோத்தமன், வண்டன்மேடு குரோவர்ஸ் யூனியன் தலைவர் ஜோய் அச்சன், பைசன் வேலி தலைவர் லம்போதரன், உடுப்பன்சோலை தலைவர் வினு ஆகியோர் ஏல விவசாய சங்கங்கள் சார்பில் பங்கேற்றனர். தொழிலாளர்கள் சார்பில் சி.ஐ.டி.யூ. , ஐ.என்.டி.யூ.சி, , ஏ.ஐ.டி.யூ.சி., பி.எம்.எஸ். , உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். கடந்தாண்டு 13.5 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டுள்ளது .
ஆனால் இந்தாண்டு விளைச்சல், விலை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் குறைந்தபட்ச போனஸ் தான் வழங்க முடியும் என்று விவசாய சங்கங்களின் சார்பில் கூறப்பட்டது.
தொழிற்சங்கங்கள் கடந்தாண்டு வழங்கிய போனஸ் தர கோரினர்.
இறுதியில் 13 சதவீதம் போனஸ் தருவது என இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இது கடந்தாண்டை விட 0.5 சதவீதம் குறைவாகும்.

