/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் துவக்கம் 13,542 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் துவக்கம் 13,542 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு
பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் துவக்கம் 13,542 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு
பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் துவக்கம் 13,542 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு
ADDED : பிப் 28, 2024 04:55 AM
தேனி, : மாவட்டத்தில் நாளை மறுநாள் (மார்ச் 1ல்) பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. இதில் 13,542 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 70, உதவி பெறும் பள்ளிகள் 15, பகுதி உதவி பெறும் பள்ளிகள் 12, தனியார் பள்ளிகள் 59 என மொத்தம் 156 மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றனர். இங்கு பிளஸ் 2 வகுப்பில் 6549 மாணவர்கள், 6993 மாணவிகள் என மொத்தம் 13542 பேர் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு செய்முறைத்தேர்வு பிப்., 12 முதல் பிப்., 17 வரை நடந்தது. எழுத்துத்தேர்வு மார்ச் 1ல் துவங்கி மார்ச் 22 வரை நடக்கிறது. மாவட்டத்தில் 54 மையங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடக்கிறது. பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 4 முதல் மார்ச் 25 வரை நடக்கிறது. இத்தேர்வினை 6956 மாணவர்கள், 7314 மாணவிகள் என 14,270 பேர் எழுகின்றனர்.
வினாத்தாள்கள் தேனி, பெரியகுளம், உத்தமபாளையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தேனி மையத்தில் இருந்து 22, பெரியகுளம் மையத்தில் இருந்து 22, உத்தமபாளையம் மையத்தில் இருந்து 18 தேர்வு தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பப்பட உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் 54 பேர், வழித்தட அலுவலர்கள் 11, வினாத்தாள் கட்டு காப்பாளர்கள் 6 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பறக்கும் படை அமைப்பது கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். இன்னும் பறக்கும் படை அமைக்கவில்லை. தேர்வு அறை கண்ணாணிப்பாளர்களுக்கான கூட்டம் இன்று நடக்கிறது.

