/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விதிமீறி வாகனங்கள் ஓட்டிய 1389 பேர் உரிமம் 'சஸ்பெண்ட்'
/
விதிமீறி வாகனங்கள் ஓட்டிய 1389 பேர் உரிமம் 'சஸ்பெண்ட்'
விதிமீறி வாகனங்கள் ஓட்டிய 1389 பேர் உரிமம் 'சஸ்பெண்ட்'
விதிமீறி வாகனங்கள் ஓட்டிய 1389 பேர் உரிமம் 'சஸ்பெண்ட்'
ADDED : நவ 05, 2025 12:41 AM
தேனி: ''மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் விதிமீறி வாகனங்கள் ஓட்டிய 1389 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளன.'' என, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறுபவர்கள் மீது வட்டார போக்குவரத்து துறையினர் நேரடியாகவும், போலீசார் பரிந்துரையிலும் ஓட்டுநர் உரிமத்தை குறிப்பிட்ட காலத்திற்கு 'சஸ்பெண்ட்' செய்து வருகின்றனர். அதன்படி கடந்த 10 மாதங்களில் சிக்னல்களில் விதிமீறி வாகனங்கள் இயக்கிய 259 பேர், அலைபேசி பயன்படுத்திய படியே வாகனங்கள் ஓட்டிய 390 பேர், அதிவேகமாக வாகனங்கள் இயக்கிய 184 பேர், குடிபோதையில் வாகனங்கள் ஓட்டிய 120 பேர், விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 133 பேர் உட்பட 1389 பேரின் ஓட்டுநர் உரிமங்களை 3 முதல் 6 மாத காலத்திற்கு 'சஸ்பெண்ட்' செய்துள்ளோம். பொது மக்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என தேனி வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் அறி வுறுத்தி உள்ளனர்.

