/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேன் -மீது கார் மோதி விபத்து பக்தர்கள் 14 பேர் காயம்
/
வேன் -மீது கார் மோதி விபத்து பக்தர்கள் 14 பேர் காயம்
வேன் -மீது கார் மோதி விபத்து பக்தர்கள் 14 பேர் காயம்
வேன் -மீது கார் மோதி விபத்து பக்தர்கள் 14 பேர் காயம்
ADDED : ஜன 06, 2024 06:50 AM
தேனி: சபரிமலையில் இருந்து ஆந்திராவிற்கு திரும்பிய வேன் மீது, சபரிமலைக்கு சென்ற கார் மோதிய விபத்தில் 14 பேர் காயமடைந்தனர்.
ஆந்திரா,மீடக் மாவட்டம் கம்பீர்பூரை சேர்ந்த டிரைவர் ஜின்கா அஞ்சையா 38. இவர் 10 ஐயப்ப பக்தர்களை ஏற்றிக் கொண்டு டெம்போ டிராவல் வேனில் சபரிமலை சென்றார். தரிசனம் முடித்து நேற்று அதிகாலை 1:30 மணிக்கு ஆந்திராவிற்கு திரும்பினார். வீரபாண்டி குமுளி மெயின்ரோடு உப்பார்பட்டி டோல்கேட் அருகே வந்த வேன் மீது, ஆந்திரா, கிழக்கு கோதாவரி மாவட்டம் அமலாபுரத்தை சேர்ந்த டிரைவர் கோமலபள்ளி நடராஜ் 35, ஓட்டி வந்த கார் மோதியது.
14 ஐயப்ப பக்தர்கள் காயம்
இவ்விபத்தில் டெம்போ டிராவல்ஸ் வேன், கார் முகப்பு பகுதிகள் பலத்த சேதமடைந்தது. வேன் டிரைவர், வேனில் பயணித்த ஐயப்ப பக்தர்கள் கொண்லை 27, அபிலாஸ் ரெட்டி 26, கனகராஜூ 32, சச்சின் 27, பிரதாப் 34, சுரேஷ் 40, ஆகிய ஏழு பேர் உட்பட 10 பேர் காயமடைந்தனர். காரில் பயணித்த பிரணவ் 26, பவேஷ்வர்மா 21, தேனி மாவட்டம் சீலையம்பட்டி மணிசுந்தர் 25, ஆகிய மூவரும் காயமடைந்தனர்.
கார் டிரைவர் கோமலபள்ளி நடராஜ், தேனி மருத்துவக்கல்லுாரியில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். வீரபாண்டி போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 14 பேரையும் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்து விசாரிக்கின்றனர்.