/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தனியாக இருந்த பெண்ணை தாக்கிய 15 பேர் மீது வழக்கு
/
தனியாக இருந்த பெண்ணை தாக்கிய 15 பேர் மீது வழக்கு
தனியாக இருந்த பெண்ணை தாக்கிய 15 பேர் மீது வழக்கு
தனியாக இருந்த பெண்ணை தாக்கிய 15 பேர் மீது வழக்கு
ADDED : நவ 16, 2025 04:18 AM
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், எருமலைநாயக்கன்பட்டி சடையாண்டி கோயில் தெரு தமிழ்ச்செல்வன், மனைவி மாலையம்மாள் 43. இவர்களது மகன்கள் தங்க தமிழ்ச்செல்வன் 23, கனகராஜ் 20, வெளியூரில் வேலை செய்கின்றனர்.
இரு ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் 23, டிராக்டரின் முன்புறம் பம்பரை, தங்கத்தமிழ்ச்செல்வனின் புதிய டிராக்டருக்கு கொடுத்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் மாலையம்மாள் வீட்டிற்கு சென்று நவீன்குமார், டிராக்டர் பம்பரை எடுக்க சென்றார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என மாலையம்மாள் கேட்டுள்ளார். அவதூறாக பேசிய நவீன்குமார் இவரது நண்பர்கள் விஷ்ணு, ஜீவானந்தம்,சந்தோஷ் குமார், தங்கப்பாண்டி, ராஜபாண்டி, பிரவீன் குமார், விக்கி, முத்து செல்வம் உட்பட 15 பேர் மாலையம்மாளை தாக்கி காயப்படுத்தினர். தேனி மருத்துவக் கல்லூரியில் மாலையம்மாள் அனுமதிக்கப்பட்டார். ஜெயமங்கலம் போலீசார் நவீன்குமார் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

