/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீர்மின் நிலையத்தில் அணை பாதுகாப்பு: அதிகாரிகள் ஆய்வு
/
நீர்மின் நிலையத்தில் அணை பாதுகாப்பு: அதிகாரிகள் ஆய்வு
நீர்மின் நிலையத்தில் அணை பாதுகாப்பு: அதிகாரிகள் ஆய்வு
நீர்மின் நிலையத்தில் அணை பாதுகாப்பு: அதிகாரிகள் ஆய்வு
ADDED : நவ 16, 2025 04:19 AM

மூணாறு: மூலமற்றம் நீர்மின் நிலையத்தில் அணை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இடுக்கி அணையின் தண்ணீரை கொண்டு மூலமற்றம் நீர் மின் நிலையத்தில் ஆறு ஜெனரேட்டர்கள் மூலம் 780 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது.
மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் படிப்படியாக செய்யப்பட்ட நிலையில், தற்போது முதன்முதலாக நவ.11ல் மின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டு மின் நிலையம் மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. அப்பணிகளை ஒரு மாதத்திற்குள் பூர்த்தி செய்வதற்கு மின்வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தற்போது 6ம் எண் ஜெனரேட்டரில் பழுதடைந்த வால்வு அகற்றப்பட்டு, புதிய வால்வு பொருத்தும் பணி நடக்கிறது.
55 டன் எடை கொண்ட வால்வை கிரேன் மூலம் அகற்றினர். இது போன்று 5ம் எண் ஜெனரேட்டரிலும் புதிய வால்வு பொருத்தப்பட உள்ளது.
ஆய்வு: நீர் மின் நிலையம் மூடப்பட்டதால், அதனுள் அணை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்பிரிவின் நிர்வாக பொறியாளர் சாய்னா, உதவி நிர்வாக பொறியாளர் ஜூண்ஜாய் , உதவி பொறியாளர் ராகுல்ராஜசேகரன் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். மின்நிலையத்தின் உட்பகுதி, தண்ணீர் கொண்டு செல்லப்படும் ராட்சத குழாய் உள்பட பல இடங்களில் ஆய்வு நடந்தது.
அதில் எவ்வித குறைபாடுகளும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

