ADDED : அக் 12, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டிபட்டி தாலுகா உப்புத்துறை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். இந்த முகாமில் மக்களைத்தேடி மருத்துவம், சுய தொழில் தொடங்க கடனுதவி உட்பட 77 பேருக்கு ரூ. 1.59 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், க.மயிலாடும்பாறை ஒன்றியகுழு தலைவர் சித்ரா, மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன் முகாமை ஒருங்கிணைத்தார்.