ADDED : டிச 20, 2025 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் நேற்று 4 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் ஆண்டிபட்டி தொகுதியில் இருந்த 315 ஓட்டுச்சாவடிகளில் மறுசீரமைக்குப் பின் 29 ஓட்டுச்சாவடிகள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் (தனி) தொகுதியில் 297 ஓட்டுச்சாவடிகள் இருந்தது, கூடுதலாக 62 உருவாக்கப் பட்டுள்ளது.
போடி தொகுதியில் 315 ஓட்டுச்சாவடிகள் இருந்தது,கூடுதலாக 31 ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
கம்பம் தொகுதியில் இருந்த 299 ஓட்டுச் சாவடிகளில் 46 கூடுதல் ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4 தொகுதிகளிலும் ஏற்கனவே இருந்த 1226 ஓட்டுச் சாவடிகளில் கூடுதலாக 168 உருவாக்கப்பட்டு மொத்தம் 1394 ஓட்டுச்சாவடிகளின் அமைக்கப் படுகிறது.

