/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
8 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது
/
8 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது
ADDED : டிச 27, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: வைகை அணை எஸ்.ஐ.,கர்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரவுண்டானா அருகே வாகன சோதனையில் இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வாகனத்தை மறித்தனர்.
போலீசாரை கண்டதும் சரக்கு வாகன டிரைவர் மற்றும் உடன் இருந்தவர் தப்பி ஓடினர். அவர்களை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் திண்டுக்கல், ஆத்தூரை சேர்ந்த கருப்பையா 35, ஈரோடு கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த அஜ்மீர்அலி 39, என தெரிய வந்தது. அவர்களது பையில் 4 பொட்டலங்களில் 7.800 கிலோ கஞ்சா இருந்துள்ளது.
கஞ்சாவை ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக வாங்கி வந்ததும் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

