/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில வினாடி வினா போட்டிக்கு 2 அணிகள் தேர்வு
/
மாநில வினாடி வினா போட்டிக்கு 2 அணிகள் தேர்வு
ADDED : நவ 10, 2024 06:15 AM
தேனி : தேர்தல் ஆணையம் சார்பில் மாநில வினாடி வினா போட்டிக்கு கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தேனி மேரிமாதா பள்ளி அணிகள் தேர்வாகின.
தேர்தல் ஆணையம் சார்பில் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக வட்டார அளவில் போட்டிகள் நடத்தி அணிகள் தேர்வு செய்யப்பட்டன.
மாவட்ட அளவிலான போட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் தலைமையில் நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர்கள் வசந்தா, சண்முகவேல், தேர்தல் தாசில்தார் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன.
தேர்தல், தேர்தல் ஆணையம், ஓட்டளிப்பதின் முக்கியத்துவம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.
எட்டு சுற்றுகளாக நடந்த போட்டியில் கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தேனி மேரிமாத பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.
இந்த அணிகள் மாநில அளவில் நவ.13ல் ஆன்லைன் மூலம் நடக்க உள்ள போட்டியில் பங்கேற்கின்றன.