/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிராவல் மண் கடத்தல் 2 டிப்பர் லாரி பறிமுதல்
/
கிராவல் மண் கடத்தல் 2 டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : ஜன 26, 2025 06:47 AM
போடி : போடி அருகே சூலப்புரம் மெயின் ரோட்டில் கனிமவளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன், தனி வருவாய் அலுவலர் கூடலிங்கம் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த ரோட்டில் வந்த 2 டிப்பர் லாரிகளை மறித்து சோதனை மேற்கொண்டனர். லாரியில் கிராவல் மண், கற்கள் இருந்தது தெரிந்தது. கனிம வளம் கொண்டு செல்வதற்கு இருவரிடமும் அரசின் அனுமதி சீட்டு கேட்டுள்ளனர்.
அனுமதி சீட்டு இல்லை என கூறி விட்டு டிப்பர் லாரியை அதே இடத்தில் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
35 யூனிட் மண் உடன் கூடிய 2 டிப்பர் லாரியை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். உதவி இயக்குனர் கிருஷ்ணன் மோகன் புகாரில் போடி தாலுாகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.