/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாழைத்தார்கள் திருடிய 2 பெண்கள் கைது
/
வாழைத்தார்கள் திருடிய 2 பெண்கள் கைது
ADDED : பிப் 20, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் புறவழிச்சாலை சாய்பாபா கோயில் அருகே செல்வம் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் உள்ளது. நன்கு விளைந்த வாழைத்தார்கள் அடிக்கடி திருடு போனது.
நேற்று முன்தினம் தோட்டக்காவலாளி மூர்த்தி தோட்டத்திற்கு சென்ற போது 2 பெண்கள் வாழைத்தார்களை வெட்டிக் கொண்டிருந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எம்.ஜி.ஆர்., காலனியைச் சேர்ந்த செல்வி, சுவேதா ஆகிய இருவரை கைது செய்தனர். 17 வாழைத்தார்கள் கைப்பற்றப்பட்டது. கூடலுார் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

