/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகள் உறவு முறை சிறுமி பலாத்காரம் மாற்றுத்திறனாளிக்கு 20 ஆண்டு சிறை
/
மகள் உறவு முறை சிறுமி பலாத்காரம் மாற்றுத்திறனாளிக்கு 20 ஆண்டு சிறை
மகள் உறவு முறை சிறுமி பலாத்காரம் மாற்றுத்திறனாளிக்கு 20 ஆண்டு சிறை
மகள் உறவு முறை சிறுமி பலாத்காரம் மாற்றுத்திறனாளிக்கு 20 ஆண்டு சிறை
ADDED : அக் 26, 2024 07:08 AM

தேனி: ஆண்டிபட்டி அருகே மகள் உறவு முறையில் உள்ள 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மாற்றுத்திறனாளி பாலமுருகனுக்கு 37, இருபது ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மாவட்ட போக்சோ சிறப்புநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆண்டிபட்டி ஒன்றியத்தை சேர்ந்த 14 வயது சிறுமி. இவரது தாய் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரை தந்தை, தாயை விவகாரத்து செய்து சென்றார். தாயுடன் சிறுமி வசிக்கிறார். சிறுமியின் தாயாரை வருஷநாடு அம்பேத்கர் நகரை சேர்ந்த வாய் பேச முடியாத பாலமுருகன் 2வது திருமணம் செய்தார். சிறுமியை மகளாக ஏற்று வசித்தார். இந்நிலையில் பாலமுருகன் , மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இதனால் தாய், அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனை பயன்படுத்தி பாலமுருகன், மகள் முறையிலான சிறுமியை 2020 ஆக.29ல் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து பாலமுருகனின் தாயார் சுந்தரம்மாள், சகோதரர்கள் மாரிமுத்து, வீராச்சாமி, மாரிமுத்துவின் மனைவி ஈஸ்வரி ஆகிய நால்வரிடம் நடந்த விபரங்களை சிறுமி கூறினார். இதை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவோம் என சிறுமியை நால்வரும் மிரட்டினர். சிறுமி புகாரில் வருஷநாடு போலீசார் பாலமுருகன் உட்பட 5பேரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளி பாலமுருகனுக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம், சுந்தரம்மாளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம், கட்டத்தவறினால் 2 வாரம் சிறை தண்டனை விதித்து, நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். வீராச்சாமி, மாரிமுத்து, ஈஸ்வரி விடுதலை செய்தார்.