/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
200 தடுப்பணைகள்: வைகை அணையில் மணல் சேர்வதை தடுக்க சிற்றாறு, ஓடைகளில்: மத்திய அரசு திட்டத்தில் வேளாண் பொறியியல், நீர்வளத்துறையினர் ஆய்வு

UPDATED : ஆக 14, 2025 04:35 AM
ADDED : ஆக 14, 2025 02:53 AM

ஆண்டிபட்டியில் தாலுகாவில் வைகை அணை அமைந்துள்ளது. இதன் மொத்த உயரம் 71 அடியாகும். இந்த அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக மூலவைகை ஆறு, முல்லைப்பெரியாறு உள்ளன. இது தவிர போடி கொட்டக்குடி ஆறும் வைகை ஆற்றில் சேர்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் போது காட்டாற்று வெள்ளம் ஏற்படுகிறது. அப்போது மலைப்பகுதிகளில் இருந்து கல், மணல் அடித்து வரப்பட்டு வைகை அணையில் சேகர மாகிறது. பல ஆண்டுகளாக மணல் சேர்ந்துள்ளதால், வைகை அணை நீர் தேக்க பகுதியில் அதிக மணல் தேங்கி உள்ளதாக கூறுகின்றனர். இதனால் வைகை அணை துார்வார வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரி வருகின்றனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வைகை அணை நீர்மட்டம் 50 சதவீத அளவிற்கு தொடர்ந்து நிலை நிற்கிறது. துார்வார நீரை வெளியேற்றிய பின் மழை இல்லை என்றால், வைகை அணையை நம்பி உள்ள பாசன நிலங்கள், குடிநீர் திட்டங்கள் முழுவதும் ஸ்தம்பித்து விடும்.
இதனால் அடுத்த கட்ட முயற்சியாக வைகை அணைக்கு நீர் வரும் ஆதாரங்களான சிற்றாறுகள், ஓடைகளில் இருந்து வரும் மணலை தடுக்கும் வகையில் ஆங்காங்கே சிறிய அளவிலான 200க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வுப்பணிகளை வேளாண் பொறியியல் துறை, நீர்வளத்துறையினர் துவங்கி உள்ளனர்.
வைகை அணையில் மணல் சேர்வது குறையும் இது குறித்துஅதிகாரிகள் கூறுகையில், 'தடுப்பணைகள் அமைக்கும் திட்டம் மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்பட உள்ளது. மலையடிவார பகுதியில் உள்ள விளை நிலங்களில் மணல் அதிகம் உள்ளது. இந்த மணல் மழைகாலத்தில் நீரோடை, சிற்றாறுகளுக்கு அடித்து செல்வதை தடுக்க விளை நிலங்களின் ஓரங்களில் கற்களை கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. மண் அரிப்பை தடுக்கும் விதமாக சிங்கராஜபுரம், முத்தலாம்பாறை, போடி மலை அடிவாரப்பகுதிகளில் சிற்றாறு, ஓடைகளில் சிறிய அளவிலான சுமார் 200க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை 3 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் மணல் வைகை அணைக்கு வந்து சேருவது குறையும்', என்றனர்.