/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அக்டோபரில் அள்ளித்தரும் வானம்; 4 ஆண்டுகளாக 2 ஆயிரம் மி.மீ., மழை இயல்பைவிட 13 மடங்கு மழை பொழிவு அதிகம்
/
அக்டோபரில் அள்ளித்தரும் வானம்; 4 ஆண்டுகளாக 2 ஆயிரம் மி.மீ., மழை இயல்பைவிட 13 மடங்கு மழை பொழிவு அதிகம்
அக்டோபரில் அள்ளித்தரும் வானம்; 4 ஆண்டுகளாக 2 ஆயிரம் மி.மீ., மழை இயல்பைவிட 13 மடங்கு மழை பொழிவு அதிகம்
அக்டோபரில் அள்ளித்தரும் வானம்; 4 ஆண்டுகளாக 2 ஆயிரம் மி.மீ., மழை இயல்பைவிட 13 மடங்கு மழை பொழிவு அதிகம்
ADDED : நவ 03, 2024 04:16 AM
தேனி : மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக அக்டோபரில் 2ஆயிரம் மி.மீ.,க்கும் மேல் மழை பதிவாவது தொடர்கிறது. கடந்த மாதம் 2493.7 மி.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக பெரியகுளத்தில் 359.4 மி.மீ., பதிவானது.
மாவட்டத்தில் 13 இடங்களில் மழைமானிகள் வைத்து மழை அளவு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் அக்டோபரில் இயல்பு மழையாக 179.7 மி.மீ., மழை கிடைக்க வேண்டும். ஆனால் கடந்த மாதம் 28 நாட்களில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பெரியகுளத்தில் 359.4 மி.மீ., ஆண்டிபட்டியில் 283.2 மி.மீ., சோத்துப்பாறை அணையில் 240.1 மி.மீ., மஞ்சளாறு அணையில் 229.6 மி.மீ., வைகை அணையில் 238.4 மி.மீ., அரண்மனைபுதுாரில் 187.6 மி.மீ., பெரியாறு அணையில் 177 மி.மீ., தேக்கடியில் 172.8 மி.மீ., வீரபாண்டியில் 154.6 மி.மீ., போடியில் 148 மி.மீ., சண்முகா நதி அணையில் 119.2 மி.மீ., உத்தமபாளையத்தில் 96.4 மி.மீ., கூடலுாரில் 87.4 மி.மீ., என மொத்தம் 2493.7 மி.மீ., மழை பதிவானது.
அக்டோபர் 2023ல் 2433 மி.மீ., 2022ல் 2515.6 மி.மீ., 2021ல் 2828.6 மி.மீ., மழை மாவட்டத்தில் பதிவாகி உள்ளது.
கடந்த மாதத்தில் 52 வீடுகள் பகுதியும், 5 வீடுகள் முழுவதும் சேதமடைந்தன.
வீடுகள் சேதமடைந்து சுவர் விழுந்ததில் கடமலைக்குண்டு சின்னப்பொன்னு, தேவதானப்பட்டி ஆயிஷா பலியாகினர். மேலும் உத்தமபாளையம் தாலுகா அனுமந்தன் பட்டியில் கன்று உயிரிழந்தது.
பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.4ஆயிரம், முழுவதும்சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.8 ஆயிரம், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம், உயிரிழந்த கால்நடைக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
மழையளவு (மி.மீ..,): தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக பெரியாறில் 75.2 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது. அரண்மனைபுதூர் 12.2, வீரபாண்டி 25.4, பெரியகுளம் 26, மஞ்சளாறு 42, சோத்துப்பாறை 5, வைகை அணை 9.4, உத்தமபாளையம் 10.2, கூடலுார் 4.8, தேக்கடி 22.8, சண்முகாநதி 9.4. மாவட்டத்தில் சராசரியாக 18.7 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.