/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'டிஜிட்டல் கிராப்' சர்வே பணியில் 20ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு: மாவட்டத்தில் பணிகள் துவங்கியது

ADDED : நவ 08, 2024 04:46 AM
கம்பம்: தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் வேளாண்,தோட்டக்கலை மாணவர்கள் டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய வேளாண் அமைச்சகம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்களை வகுக்க , விவசாயிகளின் நிலம் தொடர்பான அனைத்து தகவல்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்ற கிராப் சர்வே திட்டம் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 12 மாநிலங்களில் கடந்தாண்டு ஆகஸ்ட்டில் துவக்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் இப் பணியில் ஈடுபட வி.ஏ.ஓ.க்கள் மறுத்தனர். எனவே வேளாண், தோட்டக்கலை கல்லூரிகளில் பயிலும் 20 ஆயிரம் மாணவர்களை இந்த பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.
சர்வே பணியை இம் மாதத்திற்குள் முடிக்க காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதற்கென கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தும் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வேளாண் அதிகாரிகள் கூறுகையில், முதன் முதலாக தேனி அருகே உப்பார்பட்டி ஊராட்சியில் உள்ள 810 சர்வே எண்களில் கிராப் சர்வே செய்யப்பட்டது.
80 சதவீத பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 80 முதல் 100 மாணவர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் மாணவர்கள், வேளாண் துறை அலுவலர்கள் இணைந்து இந்த பணியில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு வட்டாரத்திலும் 10 முதல் 15 ஊராட்சிகள் உள்ளன. ஒரு சர்வே எண்ணில் என்னென்ன பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அந்த பயிர்களை போட்டோ எடுத்தும் அப்லோடு செய்யப்படுகிறது.
இதில் பெரிய அளவில் எந்த பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை. காரணம் மாணவர்களுடன் உதவி வேளாண் அலுவலர் முதல் உதவி இயக்குநர் வரை உடன் இருப்பதால் பணிகள் எளிதாக இருக்கும்.இம் மாதத்திற்குள் பணியை முடித்து விடலாம். என்கின்றனர்.