/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 220 பேர் கைது
/
தேனியில் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 220 பேர் கைது
தேனியில் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 220 பேர் கைது
தேனியில் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 220 பேர் கைது
ADDED : ஜூலை 17, 2025 11:51 PM

தேனி: தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே மறியலில் ஈடுபட்ட 'டிட்டோ ஜாக்' அமைப்பின் ஆசிரியர்கள் 220 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மறியல் நடந்தது. மாவட்டஒருங்கிணைப்பாளர் ராம்குமார் தலைமை வகித்தார். தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை செயலாளர் ராஜன், ஆசிரியர்கள் மன்ற மாநில வெளியீட்டு செயலாளர் பெரியசாமி, கள்ளர் பள்ளி கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் தீனன் பேசினர். டிட்டோஜாக் மாநில துணை பொதுச் செயலாளர் முருகன் நிறைவுரையாற்றி மறியலை துவக்கி வைத்தார். தேனி மதுரை ரோட்டில் மறியலில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., தேவராஜ் தலைமையிலான போலீசார் ஆசிரியர்கள் 220 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.