/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட கிராப் சர்வே பணியில் 2.22 லட்சம் உட்பிரிவுகள் பதிவேற்றம் தோட்டக்கலை இயக்குனர் ஆய்வு

ADDED : நவ 15, 2024 05:19 AM
தேனி: மாவட்டத்தில் நடந்து வரும் டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் இதுவரை 2.22 லட்சம் சர்வே உட்பிரிவுகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் விபரங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சர்வே பணியை தோட்டக்கலை இயக்குனர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.
சாகுபடி செய்யப்பட்டு உள்ள பயிர்கள் பற்றிய விபரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ள டிஜிட்டல் கிராப் சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயிர்கள் தொடர்பான விபரங்கள் பற்றி அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் கல்லுாரி மாணவர்கள் மூலம் இந்த சர்வே பணிகள் நவ.9 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் மொத்தம் 109 கிராமங்களில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 184 சர்வே உட்பிரிவுகளை பதிவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 2.22 லட்சம் சர்வே உட்பிரிவுகள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. கெங்குவார்பட்டியில் நடந்த சர்வே பணியை தோட்டக்கலைத்துறை இயக்குனர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார். வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ், கலெக்டர் நேர்முக உதவியாளர் வளர்மதி, தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.