/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் 22,719 பேர் குரூப் 4 தேர்வு எழுதினர்
/
மாவட்டத்தில் 22,719 பேர் குரூப் 4 தேர்வு எழுதினர்
ADDED : ஜூலை 13, 2025 12:32 AM
தேனி: மாவட்டத்தில் 108 மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வினை 22,719 பேர் எழுதினர்.
தமிழகத்தில் காலியாக உள்ள வி.ஏ.ஓ., வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் குரூப் 4 தேர்வு நேற்று நடந்தது.
மாவட்டத்தில் 108 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு எழுத 27, 158 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தேவதானப்பட்டி மேரிமாதா கலை, அறிவியல் கல்லுாரியில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் நேரில் பார்வையிட்டார்.
தேர்வு கண்காணிப்பு, பாதுகாப்பு பணியில் அலுவலர்கள், போலீசார் என 1200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
தாலுகா வாரியாக தேனியில் 6878 பேர், ஆண்டிபட்டியில் 3004 பேர், போடியில் 3013 பேர், பெரியகுளத்தில் 3826 பேர், உத்தமபாளையத்தில் 5998 பேர் என மொத்தம் 22,719 பேர் தேர்வு எழுதினர். 4439 பேர் ஆப்சென்ட் ஆகினர்.