/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வனப்பகுதியில் முன் எச்சரிக்கை 23 கி.மீ.,துார தீ தடுப்பு கோடுகள்
/
வனப்பகுதியில் முன் எச்சரிக்கை 23 கி.மீ.,துார தீ தடுப்பு கோடுகள்
வனப்பகுதியில் முன் எச்சரிக்கை 23 கி.மீ.,துார தீ தடுப்பு கோடுகள்
வனப்பகுதியில் முன் எச்சரிக்கை 23 கி.மீ.,துார தீ தடுப்பு கோடுகள்
ADDED : பிப் 18, 2025 05:42 AM
ஆண்டிபட்டி: வெயில் துவங்கிய நிலையில் உதிர்ந்த இலைகள், காய்ந்த சருகுகளால் வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆண்டிபட்டி வனச்சரகர் அருள்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: தற்போது வெப்பம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் உதிர்ந்த இலைகள், காய்ந்த சருகுகள் புற்கள் அதிகம் உள்ளன. வனம் ஒட்டிய பகுதியில் புகைப்பிடித்தல், எளிதில் தீப்பற்றும் பொருட்களை அப்படியே விட்டு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். ஆண்டிபட்டி வனச்சரகத்திற்குட்பட்ட ஏத்தக்கோவில் மலை, மறவபட்டி, கணவாய் மலைப்பகுதிகளில் கடந்த காலங்களில் அடிக்கடி தீ விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது.
தற்போது தீ விபத்தை தடுக்கும் விதமாக முக்கிய இடங்களில் 6 மீட்டர் அகலத்தில், சில இடங்களில் 3 மீட்டர் அகலத்தில் 23 கி.மீ.,நீளத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. தீ தடுப்பு கோடுகளில் பெரிய மரங்களை தவிர சிறு செடிகள், புற்கள் காய்ந்த சருகுகள் இன்றி ரோடு போல அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் தீ பரவினாலும் இந்த தடுப்பு கோட்டை கடந்து பரவுதல் தடுக்கப்படும். வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்து குறித்து வனத்துறையினருக்கு உடன் தகவல் அளித்து தீ பரவுதலை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களும் வனத்துறையினருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

