/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி வியாபாரி வீட்டில் 23 பவுன் நகை கொள்ளை
/
தேனி வியாபாரி வீட்டில் 23 பவுன் நகை கொள்ளை
ADDED : ஜன 04, 2025 11:09 PM

தேனி:தேனி அருகே பழனிசெட்டிபட்டி வியாபாரி கண்ணன் வீட்டின் கதவை சாவியால் திறந்து 23 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பழனிசெட்டிபட்டி சவுடேஸ்வரி நகர் பழைய போலீஸ் ஸ்டேஷன்தெரு கண்ணன், 35. இவர் தேனி சுப்பன்செட்டி தெருவில் மின்மோட்டார் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா, நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு அருகே உள்ள கோயிலுக்கு சென்றார். அப்போது வீட்டை பூட்டி, சாவியை வாசல் அருகில் இருந்த கோலப்பொடி டப்பாவில் வைத்தார்.
திரும்பிவந்து சாவியை எடுத்து வீட்டை திறந்தார். அப்போது உள்ளே மின் விளக்குகள் எரிந்தது. முன்னதாக வீட்டின் கதவை சாவியால் திறந்த மர்ம நபர்கள் பீரோ லாக்கரை திறந்து அதில் இருந்து ரூ.6.93 லட்சம் மதிப்பிலான 23 பவுன் தங்க நகைகள், ரூ.3600 மதிப்பிலான வெள்ளி கொலுசுகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

