/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆந்திராவிலிருந்து போடிக்கு 24 கிலோ கஞ்சா கடத்தல்
/
ஆந்திராவிலிருந்து போடிக்கு 24 கிலோ கஞ்சா கடத்தல்
ADDED : அக் 27, 2025 12:35 AM

போடி: தேனி மாவட்டம் போடி சில்லறை வியாபாரிகளிடம் விற்பனை செய்வதற்கு ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 24 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் சிறுவன் உட்பட நால்வரை கைது செய்தனர்.
தேனி மேல்மங்கலம் தங்கப்பாண்டி 23., தென்கரை 17 வயது சிறுவன் இருவரும் ஆந்திராவை சேர்ந்த கஞ்சா வியாபாரி செல்லாராவிடம் தொடர்பு வைத்துள்ளனர். இவர்கள் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கோடாங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்த உக்கிரபாண்டி 52, மனைவி இந்திராணி 50, ஆகியோருடன் சேர்ந்து ஆந்திராவில் இருந்து 24 கிலோ கஞ்சாவை தனித்தனி பொட்டலங்களாக பார்சல் செய்து, போடிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு சில்லரை வியாபாரிகளிடம் விற்பனை செய்வதற்காக போடி சாலைக் காளியம்மன் கோயில் அருகே தனித் தனியாக நின்றிருந்தனர். ரோந்து போலீசார் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிந்தது. தங்கப்பாண்டி, உக்கிரபாண்டி, இந்திராணி, 17 வயது சிறுவன் ஆகியோரை போடி டவுன் போலீசார் கைது செய்தனர். 24 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. கைதானவர்கள், ஆந்திராவைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி செல்லாராவ் உட்பட ஐவர் மீது வழக்கு பதிந்தனர்.

