/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
2 மகள்களை அணையில் வீசி கொன்று தந்தையும் தற்கொலை
/
2 மகள்களை அணையில் வீசி கொன்று தந்தையும் தற்கொலை
ADDED : அக் 27, 2025 01:00 AM

பெரியகுளம்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், மன்னமனுாரைச் சேர்ந்த கனரக வாகன டிரைவர் கிருஷ்ணமூர்த்தி, 37. இவரது மனைவி பிரியங்கா, 30. இவர்களுக்கு தாரா ஸ்ரீ, 7, தமிழிசை, 5, என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். குடும்பத்துடன் பெரியகுளம் வடகரையில் வசித்தனர்.
சில ஆண்டுகளாக மன அழுத்தத்திற்கு ஆளான கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அக்., 24 மதியம் மகள்களுடன் வெளியே சென்றார்; நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், பெரியகுளம் வடகரை போலீசில் பிரியங்கா புகார் அளித்தார்.
இந்நிலையில், நேற்று காலை 10:00 மணிக்கு வைகை அணை வடக்கு நீர்த்தேக்க பகுதியில் சிறுமியர் உடல்கள் மிதந்தன. வைகை அணை போலீசார் விசாரித்ததில், தாரா ஸ்ரீ, தமிழிசை என உறுதி செய்தனர். தேடுதலில் கிருஷ்ணமூர்த்தி உடலும் மீட்கப்பட்டது.
அணைக்கு மகள்களை சுற்றிப் பார்க்க அழைத்து சென்று, நீர்த்தேக்க பகுதியில் இருவரையும் வீசி கொலை செய்து, கிருஷ்ணமூர்த்தியும் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

