/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி மாவட்ட அரசுத்துறைகளில்... 2600 காலியிடங்கள் நிரப்பப்படவில்லை: கூடுதல் பணிச்சுமையால் அலுவலர்கள் பாதிப்பு
/
தேனி மாவட்ட அரசுத்துறைகளில்... 2600 காலியிடங்கள் நிரப்பப்படவில்லை: கூடுதல் பணிச்சுமையால் அலுவலர்கள் பாதிப்பு
தேனி மாவட்ட அரசுத்துறைகளில்... 2600 காலியிடங்கள் நிரப்பப்படவில்லை: கூடுதல் பணிச்சுமையால் அலுவலர்கள் பாதிப்பு
தேனி மாவட்ட அரசுத்துறைகளில்... 2600 காலியிடங்கள் நிரப்பப்படவில்லை: கூடுதல் பணிச்சுமையால் அலுவலர்கள் பாதிப்பு
ADDED : ஆக 10, 2025 03:00 AM

அரசு இயந்திரத்தில் பொதுமக்களின் சேவைக்காக ஒவ்வொரு துறைகளிலும் அலுவலர்களின் பணி முக்கிய மானதாகும். ஒவ்வொரு துறையிலும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பல நிலைகளில் உள்ளனர்.
வருவாய்த்துறை, ஊரகம், கல்வி, வனம், பொது சுகாதாரம், நெடுஞ்சாலைத்துறைகள், கருவூலம், நில அளவை, முன்னாள் ராணுவ வீரர் நலன், விளையாட்டுத்துறை, வனத்துறை, நகராட்சிநிர்வாகத்துறை, பேரூராட்சிகள் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி, குழந்தைகள் நலன், வேளாண், தோட்டக்கலை, பொதுப்பணித்துறை என 45க்கும் மேற்பட்ட அரசுத்துறைகள் உள்ளன.
தேனி மாவட்ட அரசுத்துறைகளில் 15,056 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது 12,238 பேர் பணிபுரிகின்றனர். மீதமுள்ள 2818 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதில் கல்வித்துறையில் 580 பணியிடங்கள், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்துறையியில் தலா 100, வேளாண், தோட்டக்கலை துறையில் 70, மாநில நெடுஞ்சாலைத்துறையில் 140, மேகமலை வனகாப்பகத்தில் 100, பொது சுகாதாரத்துறையில் 300, மருத்துவ நலப் பணிகள் துறையில் 160, குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் 270, மருத்துவக்கல்லுாரியில் 150, கால்நடை மருத்துவ துறையில் 100, நுாலகத்துறையில் 50 என அனைத்து துறைகளையும் சேர்த்து 2600க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
பாதிப்பு அரசு பணியிடங்களில் அலுவலர்கள், பணியாளர்கள் இல்லாததால் தற்போதுள்ள அலுவலர்கள் கூடுதலாக கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் ஒவ்வொருவருக்கும் கூடுதல் பணிசுமை ஏற்பட்டுள்ளது. இச் சூழலால் சான்றிதழ் பெறுதல், ஆவணங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பித்து பொதுமக்கள் பல நாட்கள், மாத கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் பொதுமக்களும் பாதிப்படைகின்றனர்.
இது குறித்து அலுவலர்கள் கூறுகையில், ' 1997 ல் தேனி மாவட்டம் உருவான போது மக்கள் தொகை அடிப்படையில் அரசு பணியிடங்கள் உருவாக்கப்பட்டது.
28 ஆண்டுகளுக்கு பின் மக்கள் தொகை இருமடங்காக உயர்ந்து சேவையின் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால் பணியிடங்கள் அதிகரிக்கவில்லை. இதனால் அரசு துறைகளில் பொதுமக்களுக்கு வழங்கும் சேவை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பணியிடங்களை அதிகரித்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,' என்றனர்.