/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காலாவதியான 27 கிலோ உணவுப் பொருட்கள் அழிப்பு
/
காலாவதியான 27 கிலோ உணவுப் பொருட்கள் அழிப்பு
ADDED : ஆக 27, 2025 12:41 AM
தேனி; தேனி பஸ் ஸ்டாண்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 27 கிலோ காலாவதி உணவுப்பொருட்களை உணவுப்பாதுகாப்புத்துறையினர் கைப்பற்றி அழித்தனர்.
மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்ட், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரமற்ற, கலாவதி உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக உணவுப்பாதுகாப்புத்துறையினர், நகராட்சி சுகாதாரப்பிரிவினர் இணைந்து கர்னல் ஜான்பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில்ஆய்வு செய்ய கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டார். நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கவிபிரியா தலைமையில் நகர உணவுப்பாதுகாப்பு அலுவலர் லிங்கம், சுகாதார ஆய்வாளர் ஜெயசந்திரன் ஆய்வு செய்தனர். பொட்டலமிடப்பட்டு, காலாவதி தேதி குறிப்பிடா 27 கிலோ உணவுப்பொருட்கள், அழுகிய பழங்கள் 8 கிலோவை கைப்பற்றினர். அதனை விற்பனையாளர்கள் முன்னிலையில் அழித்தனர். அதனை விற்பனை செய்த 6 கடைகளுக்கு தலா ரூ. ஆயிரம் அபராதம் விதித்தனர்.