/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் வனவிலங்கு தாக்குதல் நான்கு ஆண்டுகளில் 27 பேர் பலி
/
இடுக்கியில் வனவிலங்கு தாக்குதல் நான்கு ஆண்டுகளில் 27 பேர் பலி
இடுக்கியில் வனவிலங்கு தாக்குதல் நான்கு ஆண்டுகளில் 27 பேர் பலி
இடுக்கியில் வனவிலங்கு தாக்குதல் நான்கு ஆண்டுகளில் 27 பேர் பலி
ADDED : ஏப் 10, 2025 06:25 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் வனவிலங்கு தாக்குதலின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றபோதும், அதற்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை இல்லை என்கின்றனர் பொதுமக்கள்.
இம்மாவட்டத்தில் 2021 ஜனவரி முதல் இந்தாண்டு ஜனவரி வரையிலான நான்கு ஆண்டுகளில் வனவிலங்கு தாக்குதல் மூலம் 27 பேர் பலியாகினர்.
244 பேர் பலத்த காயத்துடன் உயிர் தப்பியதாக வனத்துறை கணக்கின்படி தெரியவந்தது. இதில் காட்டு யானை தாக்குதலில் பெரும்பாலானோர் இறந்தனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் பலியானவர்கள் எண்ணிக்கை:
இழப்பீடு: மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் வனவிலங்கு தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் ரூ.1.92 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. அதே சமயம் இதுவரையிலும் இழப்பீடு தொகை கிடைக்காமல் ஏராளமானோர் உள்ளனர்.
மனித, வனவிலங்கு மோதலை தடுப்பதற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு ஆண்டு தோறும் நிதி ஒதுக்கியும் எவ்வித பயனும் இல்லை.
2021-20-22ல் ரூ.24 கோடி, 2022 -20-23ல் ரூ.25 கோடி, 2023--2024ல் ரூ.32 கோடி, 2024 -20 25 ஆண்டில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.