/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீட் தேர்வு எழுதும் 278 அரசுப்பள்ளி மாணவர்கள்
/
நீட் தேர்வு எழுதும் 278 அரசுப்பள்ளி மாணவர்கள்
ADDED : ஏப் 29, 2025 05:52 AM
தேனி: மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் படித்த பிளஸ் 2 மாணவர்கள் 278 நீட்தேர்வு எழுத உள்ளனர்.
எம்.பி.பி.எஸ்.,  மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மே 4ல் நடக்கிறது. இத்தேர்வினை எழுத மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் படித்த 60 மாணவர்கள், 178 மாணவிகள் உட்பட 238 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இது தவிர தேக்கம்பட்டியில் செயல்படும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 40 மாணவர்களும்,  உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 140 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்த மாணவர்களுக்கு அரசு சார்பில் தேனி மதுரை ரோட்டில் உள்ள ஆர்.சி., உயர்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

