/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் 2867 பேர் பங்கேற்பு
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் 2867 பேர் பங்கேற்பு
ADDED : ஜூன் 16, 2025 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 1ஏ தேர்வினை 2867 பேர் எழுதினர்.
தமிழகத்தில் காலியாக உள்ள உதவி கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி கமிஷனர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 1ஏ தேர்வு மாவட்டத்தில் 14 தேர்வு மையங்களில் நடந்தது.
இத்தேர்வினை எழுத 3907 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. தேர்வினை 2,867 பேர் எழுதினர். மீதமுள்ள 1040 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தேர்வு மையங்களை 6 பறக்கும்படை குழுவினர் கண்காணித்தனர்.